| |
|
|
|
| |
ஐ.நாவின் நிபுணத்துவ முகவர் அமைப்புக்கள் இலங்கையின் அபிவிருத்திக்கு ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக ஆதரவளித்துள்ளன. தொழிநுட்ப நிபுணத்துவம், நிதி உதவி ஆகியவற்றுடன் இயற்கை மற்றும் மனிதரால் உருவான அனர்த்தக் காலங்களின்போதும் இந்த ஆதரவை அவை நல்கின. பெரும்பாலான அபிவிருத்தி குறிகாட்டிகளில் இலங்கை தெற்காசியாவில் முன்னணி இடத்தை வகிக்கின்றது. இலங்கையில் ஐ.நா வின் 16 வதிவிட முகவர் நிறுவனங்கள் உணவூப் பாதுகாப்பு, விவசாயம், கல்வி, சுகாதாரம், சுற்றாடல் போன்ற அடிப்படையான பிரச்சினைகளில் அரசாங்கத்துடன் தொடர்ந்து பாடுபட்டு வருகின்றன. இப் பிரச்சினைகள் இந்த நாட்டு மக்களின் தினசரி வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்துபவையாகும்.
மிகச் சமீபத்தில் ஐ.நா அமைப்பு சமாதானத்தைக் கட்டியெழுப்பும் முயற்சிகளிலும் இன மோதலின் பாதகமான விளைவூகளைத் தணிக்கவூம் அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்றி இருக்கின்றது. தற்போது நடைபெற்றுவரும் இந்த முயற்சியில் ஐ.நாவின் மூத்த அதிகாரிகளும் விசேடப் பிரதிநிதிகளும் ஏனைய பொறியமைப்புக்களும் ஜனநாயக விழுமியங்கள், அடிப்படைச் சுதந்திரங்கள், சட்டத்தின் ஆட்சி மற்றும் மனித உரிமைகள் பற்றி அரசாங்கத்துடன் பகிரங்கமான கலந்துரையாடலை ஆதாரித்தமை குறிப்பிடத்தக்கது. |
|
|
| |
|
|
| |
|
|