| |
இலங்கையின் வடக்கிலும் கிழக்கிலும் இலங்கை இராணுவத்துக்கும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கும் இடையே இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக இடம்பெற்று வரும் மோதல் பல்லாயிரக்கணக்கான உயிர்களைப் பலி கொண்டுள்ளது. அது, பொதுமக்கள் அடுத்தடுத்தும் பாரிய அளவிலும் இடம்பெயர்வதற்கு இட்டுச் சென்றது.
முன்னுள்ள பாதை
உண்டாப் பிரதானமாக அபிவிருத்திப் பிரச்சினைகளைக் கையாள்வதற்காக உருவாக்கப்பட்டுள்ள அதேவேளையில், சமகால மோதலுக்கு பாரிய அளவிலான மனிதாபிமான, மீட்பு ஆற்றல் அவசியமாகின்றது. ஐ.நா குழுவானது பொதுவான மனிதநேயச் செயற்பாட்டுத் திட்டம் (பொ.ம.செ.தி) எனப்படும் வருடாந்த மூலோபாய ஆவணத்தில் இப் பிரச்சினைகளை முன்வைக்கின்றது.
2006, 2007ம் ஆண்டுகளில், பொ.ம.செ.தி தாராளமான கொடையாளர் ஆதரவூடனும் அரசாங்கம், அ.சா.சிக்கள் மற்றும் பிற பங்காளிகளின் ஒத்துழைப்புடனும் 400,000 என மதிப்பிடப்பட்ட மக்களுக்கு மனிதாபிமான உதவியை வழங்கியது. இந்த மக்கள், தமது வீடுகளில் இருந்து இடம் பெயர்ந்தவர்கள்; அல்லது மோதல் காரணமாகத் தாம் எளிதில் பாதிக்கப்படக்கூடியவர்கள் என்று கருதியவர்கள். 2008ல் பொ.ம.செ.தி மோதல் சம்பந்தப்பட்ட தனது உதவி வேலைத்திட்டங்களை மேற்கொள்வதற்காக 145 மில்லியன் அமொரிக்க டொலருக்கு வேண்டுகோள் விடுக்கின்றது. மனிதநேய உதவியை வழங்குவதில் கள அளவிலே ஐ.நா பாரிய இடையூறுகளை சமாளிக்க வேண்டிய அவசியம் உள்ளது. சமீப ஆண்டுகளில் முகவர் அமைப்புக்கு இடையிலான நிலைக் குழு வாயிலாக அவசர நிலைமைகளுக்குக் கூடுதலான அளவில் ஒருங்கிணைக்கப்பட்ட முயற்சிகளை மேற்கொள்வதில் கணிசமான அளவூக்கு முன்னேற்றம் காணப்பட்டுள்ளது. அனைத்து முக்கியமான மனிதநேயச் செயற்பாட்டாளர்களைக் கொண்ட குழு இதுவாகும். இதற்கு இலங்கையில் மனிதநேய விவகார ஒருங்கிணைப்புக்கான அலுவலகத்தினால் (ம.வி.ஒ.அ) தலைமை தாங்கப்படுகின்றது. இதன் அங்கத்தவர்களில் பல்வேறு ஐ.நா முகவர் அமைப்பக்களும் பாரிய அரசாங்க சார்பற்ற மற்றும் அரசாங்கங்களுக்கு இடையிலான மனிதநேய அமைப்புக்களும் அடங்குகின்றன.
இலங்கையில் மானுட மற்றும் மனிதரால் உருவாக்கப்பட்ட அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட பல்லாயிரக் கணக்கான மக்களுக்கு உதவ நிதியைத் திரட்டுவதில் ம.வி.ஒ.அ முக்கிய அமைப்பாக விளங்குகின்றது. பாரிய பிரச்சினைகள் மறக்கப்படாமல் இருப்பதை நிச்சயப்படுத்துவதற்கு முயற்சிப்பதன் மூலம் மனிதநேய சமூகத்துக்குக் கொள்கை ரிதியான ஆதரவையூம் அது வழங்குகின்றது. ம.வி.ஒ.அ மனிதநேயபப் பிரச்சினைகளைப் பாரிந்துரைக்கின்றது, மௌனிகளாக இருக்கும் பாதிக்கப்பட்டவர்களுக்குக் குரல் கொடுக்கின்றது, பரந்த மனிதநேய சமூகத்தின் கருத்துக்களையூம் அக்கஙைகளையூம் முன்வைக்கின்றது. |
|
|
| |
Read More.. |
|
|
| |
|
|
|