| |
|
|
|
| |
போர், இயற்கை அனர்த்தம், அரசியல் மோதல் என்பன இலங்கையின் சாதாரண மக்கள் மீது ஆழமான வடுக்களை விட்டுச் சென்றுள்ளன. தமது வீடுகளில் இருந்து வெளியேறியவர்கள், தமது குடும்பங்களில் இருந்த பிரிக்கப்பட்டவர்கள், உதவக் கூடிய வகையில் வசதியில்லாத சமூகங்களில் வளங்களோ, அல்லது ஆதரவோ இல்லாமல் விடப்பட்டவர்கள் இவர்களாவர். அனர்த்தத்துக்குப் பின்னர் இலங்கையிலுள்ள ஐ.நா குழு முகவர் அமைப்புகக்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு--இவர்களில் பெரும்பாலானவர்கள் குழந்தைகளும் பெண்களும் முதியோருமாவர்—உணவூ, தங்குமிட வசதி, மருந்துகள் மற்றும் பிற உதவிகளை வழங்குகின்றன. எளிதில் பாதிக்கப்படக்கூடிய குடும்பங்கள் மற்றும் இடம்பெயர்ந்த நபர்கள் தமது வாழ்வைப் புதிதாக ஆரம்பிப்பதற்குத் தேவையான உடனடி மற்றும் இடைக்கால உதவியை வழங்குவதன் மூலம் அவர்கள் தன்னிறைவூ பெற உதவூவதே ஐ.நாவின் குறிக்கோளாகும். |
|
|
| |
|
|
|
| |
|
|
|