| |
2000 ம் ஆண்டு செப்டெம்பாரில் ஐ..நா. மில்லேனியம் உச்சி மகாநாடு நடைபெற்றது. இதில் உலகத் தலைவர்கள் வறுமை, பட்டினி, நோய், கல்வியறிவின்மை, சுற்றாடல் தரமிழத்தல், பெண்களுக்கு எதிரான பாரபட்சம் ஆகியவற்றை எதிர்த்துப் போராடுவதற்காக காலவரம்புள்ளதும் அளவிடக் கூடியதுமான ஒரு தொகுதி குறிக்கோள்களையூம் இலக்குகளையூம் ஏற்றுக் கொண்டார்கள். உலக நிகழ்ச்சி நிரலின் மையமாக வைக்கப்பட்ட இவை இப்போது மில்லேனியம் அபிவிருத்திக் குறிக்கோள்கள் (மி.அ.கு) என அழைக்கப்படுகின்றன.
உலகம் மி.அ.குக்களின் மார்க்கத்தில் முன்னேறி வருகின்றது. ஆனால், அது சமதையற்றதாகவூம் மிகவூம் தாமதமானதாகவூம் உள்ளது. மிகப் பெரும்பான்மையான நாடுகள் தமது எல்லைகளுக்கு அப்பால் இருந்து பாரிந்துரை, நிபுணத்துவம், வளங்கள் ஆகியவற்றில் கணிசமான ஆதரவைப் பெற்றால் மாத்திரமே மி.அ.குக்களை அடைய முடியூம். அபிவிருத்தியடைந்ததும் அபிவிருத்தியடைவதுமான உலகம் இரண்டிலும் உலக சமூகம் எதிர்நோக்கும் சவால்கள் நிதி ஆதரவையூம் அரசியல் விருப்பத்தையூம் அணிதிரட்டுவதும், அரசாங்கங்களை ஈடுபாடு கொள்ளச் செய்வதும் அபிவிருத்தி முன்னுரிமைகள் மற்றும் கொள்கைகளைத் திசைவழிப்படுத்துவதும் ஆற்றலைக் கட்டியெழுப்புவதும் சிவில் சமுதாயம் மற்றும் தனியார்த் துறையினரைச் சென்றடைவதும் ஆகும். பொதுவான நோக்கின் திசையில் ஒத்திசைவாகச் செயல்படுவதற்கு ஐ.நா அமைப்பு முழுவதற்குமான கட்டமைவை மி.அ.குக்கள் வழங்குகின்றன. உண்மையிலேயே அபிவிருத்தியடைந்து வரும் ஒவ்வொரு நாட்டிலும் ஐ.நா. மாற்றத்தைப் பாரிந்துரைக்கின்றது, அறிவாற்றல் மற்றும் வளங்களுக்காக நாடுகளை இணைக்கின்றது, தரவூகளைச் சேகாரித்து அவதானிக்கின்றது, நாட்டின் மட்டத்தில் பரந்துபட்ட முயற்சிகளை இணைக்கின்றது.
|
|
|
| |
|
|
|