| |
குறிப்பிட்ட ஒரு நாட்டில் ஐ.நா வின் மூத்த ஐ..நா அதிகாரி ஐ.நா வதிவிடப் பிரதிநிதியாவார். அவர் ஐ.நா செயலாளர் நாயகத்தின் பிரதிநிதியாகவூம் விளங்குகின்றார். மனிதநேய உதவி வழங்கப்பட்டுவரும் இலங்கை போன்ற ஒரு நாட்டில் மனிதநேய இணைப்பாளர் பாத்திரத்தையூம் வதிவிட இணைப்பாளர் பெறுகின்றார். தலைப்பில் குறிப்பிடப்பட்டிருப்பதைப் போல, வதிவிட இணைப்பாளர்-மனிதநேய இணைப்பாளாரின் மையமான கடமை ஐ.நா வின் செயற்பாட்டு நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பதாகும்.
ஐ.நா. முகவர் அமைப்புக்களின் பிரதிநிதிகளுடன் கலந்து ஆலோசித்தும் அரசாங்கத்தின் குறிக்கோள்கள், முன்னுரிமைகள் ஆகியவற்றுக்கு இசைவாகவூம் இந்தப் பணி மேற்கொள்ளப்படுகின்றது. இலங்கையிலுள்ள நாட்டுக்கான குழுவின் பணிகளைச் சிறப்பாக ஒருங்கிணைப்பதற்காக முகவர் அமைப்புக்கள் பல்வேறு தொனிப்பொருள்சார் குழுக்களையூம் செயலணிகளையூம் நிறுவியூள்ளன. இவை இலங்கையின் தலையாய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகள் பற்றியனவாகும்.
வதிவிட இணைப்பாளர் அலுவலகம் பின்வருவனவற்றைக் கையாள்கின்றது:
செயற்பாட்டு ஒருங்கிணைப்பு
நாட்டு மூலோபாய ஆவணங்கள், பொதுவான நாட்டு மதிப்பீடு, ஐ.நா அபிவிருத்தி உதவி கட்டமைப்பு, கள மட்டக் குழுக்கள், முகவர் அமைப்புக்களுக்கு இடையிலான தொனிப் பொருள்சார் குழுக்கள், கூட்டு வேலைத் திட்டமிடல் போன்றவை உள்ளிட தேசிய ஒருங்கிணைப்புக்கு ஆதரவூ.
முகாமைத்துவ ஒருங்கிணைப்பு
பொதுச் சேவைகள், குழு-அமைப்பு மற்றும் முகவர் அமைப்புகளுக்கிடையிலான பயிற்சி, வதிவிடமற்ற ஐ.நா முகவர் அமைப்புகளைப் பிரதிநிதித்துவம் செய்தல், பாதுகாப்பு போன்றவை.
ஐ.நா அமைப்புக்கான ஆதரவூ
ஐ.நா. அமைப்பின் நோக்கங்கள் மற்றும் அரசாணைகளை முன்னேற்றுவதற்கு ஆதரவூ
இலங்கைக்கான ஐ.நா.வதிவிட இணைப்பாளாரின் வருடாந்த அறிக்கைகள் குறிப்பிட்ட ஆண்டின் போது நாட்டுக்கான ஐ.நா. குழுவின் ஒருங்கிணைக்கப்பட்ட பணி பற்றிய சர்வ அம்சங்களையூம் கொண்ட விளக்கத்தைத் தருகின்றன. |
|
|
| |
|
|
|